Friday, July 20, 2018

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல்

நடிகர் பிரபு தேவாவின் புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மெர்க்குரி திரைப்படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபு தேவா நடித்து வருகிறார். அந்த வரிசையில் இணையும் புதிய திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்' ஆகும். 




ஏ. சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். இமான் இசையமைக்க நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கிறார். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. சி. முகில் செல்லப்பன் பிரபு தேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜபக்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. விரைவில் முன்னோட்ட காணொளிகள் வெளியாகவுள்ளன. 




தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் அண்மையில் 60 வருடங்களுக்குப் பின் குஜராத்தில் இருந்து ராஜராஜன் சிலையை தமிழகத்திற்கு மீட்டு வந்தார். 7000 சிலைகள் தமிழகத்தில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில் இவற்றை மீட்பது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது. 




இந்நிலையில் பிரபு தேவாவின் படத்துக்கும் இந்தக் கதைதான் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைப் போன்று இதுவும் ராஜராஜன் சிலை மீட்பு குறித்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. 



#PrabhuDeva #PonManikkavel #DImman #Tamil #TamilMovie #CinemaNews #TamilCinema #TamilMovies2018 #RajaRajan #Tanjavur #TamilFilm #SIGARAMCO 

No comments:

Post a Comment

Popular Posts